Wednesday, March 31, 2010

நாங்களே அடிமை தான்

நாங்களே அடிமை தான்

நாங்களே அடிமைகளாகத்தான் உள்ளோம் , ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்,

தந்தை பெரியார் திரு ஈ.வெ.ரா கூறியதாக நான் எங்கோ படித்தது அல்லது இணையத்தில் ஏதோ ஒரு உரையில் கண்டு கேட்டது, யாரிடம் இந்த கூற்று கூறப்பட்டது என்று சரியாக தெரியவில்லை, ஈழத் தந்தை திரு செல்வாவிடமா அல்லது திரு அமிர்தலிங்கத்திடமா என்பதை மீண்டும் ஒருமுறை நான் அறிந்து கொள்ளவேண்டும் , அதற்கு முன் நான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்துவிட்டது ,

யாரிடம் கூறினார் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவருடைய கூற்றுகள் இன்னமும் நிலைபெற்று அழியாமல் நிற்கின்றன…. இன்றும் அடிமைகளாக, தமக்கென ஒரு அரசு இருந்தும் (எண்ணிக்கையில் பார்த்தல் 2 அரசுகள், புதுவையையும் சேர்த்து)


வெளியுறவு கொள்கையிலும் சரி, அண்டை மாநில கொள்கையிலும் சரி, இன்னமும் அடிமைகளாகவே கடத்துகிறோம் காலத்தை,

தந்தை பெரியார் அவர்கள் தேச விடுதலையை ஏன் எதிர்த்தார் என்ற காரணங்களும் இன்றளவில் மிக மிக தெளிவான உண்மையாகவே நம் முன் நிற்கின்றன , தேசம் விடுதலை அடைவதால் தமிழருக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை , அவை அனைத்தும் ஆதிக்க வர்க்கத்தின் கைகளில் அகப்படும் என்ற அவரின் பார்வை , இன்றும் நிதர்சனமாக கோலோச்சி ஆதிக்கம் செலுத்துகிறது ……


எந்த உரிமையும் அதிகாரமும் அற்று, உலகின் பழம்பெரும் இனம் , இறையாண்மை காக்கும் கூட்டத்தோடு கடத்துகிறது காலத்தை,

இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம் நாம் , எமக்கே உரிய தமிழர் இறையாண்மையை தோற்றுவிக்க , எமது மீனவர்களை காக்க, நியாயமான, நேர்மையான நீர் பங்கீட்டு உரிமைகளை மீட்க,

இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்

இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்


No comments:

Post a Comment