Saturday, February 20, 2010

தமிழா, போதுமா இவை மட்டும் உனக்கு

தமிழா, போதுமா இவை மட்டும் உனக்கு

அடக்கம், பன்பு, பணிவு, விருந்தோம்பல், வந்தாரை வாழவைத்தல், தமிழா, போதுமா இவை மட்டும் உனக்கு...........
தமிழன் மட்டுமே இன்னும் எத்தனை காலம் தான் இவற்றையெல்லாம் கட்டிக்காப்பது,
நாமென்ன இவற்றீர்கெல்லாம் காப்புரிமையா பெற்றுள்ளோம்,
நம் நாடு, நம் மக்களென, தமிழா உனக்கு மட்டும் ஏன் இந்த சிந்தனை,
கார்கில் நிதியானாலும், பூகம்ப நிதியானாலும், தமிழக பங்களிப்பே அதிகமாம்,
அடடா என்ன ஒரு குணாதிசியம், இருந்து விட்டு போகட்டும்,
தமிழா உனக்கு என்ன நாதி இருந்தது நீ அல்லுரும்போது,
மழை பொய்த்தால், நீ சாலையில் வந்து போராட வேண்டும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், நடுவன்மன்றம், இப்படி ஒவ்வொரு மன்றமாக சென்று வந்தால்,
அடுத்த பருவத்தில் மழை வந்தால்தான் உனக்கு விடிவு, இப்படியே நகர்கிறது நிலை....
இருக்கும் ஒரு நடுவண் குழு படுத்தும் பாடு போதாதென்று இப்போது இன்னுமொரு ஐவர்குழு,
இதே குழு ஐம்பதாகி, ஐம்பது ஆண்டுகளுக்கு பின் நடுவர் குழுவாகி அப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆட்சியாளர்களும், நீதிமான்களும்.......
ஆம் மற்றவர்களுக்கு ஒரு நீதியென்றால், தமிழனுக்கு வேறு நீதி,
அணைத்து உரிமைகளும் இருந்து, ஆதாரங்களும் இருந்தும், வரலாறு இருந்தும், அதை பெற்றுகொள்வதர்க்கு நாம் படும் பாடு,
ஆனால் என்ன ஆனாலும் நாம் இறையாண்மையை மதித்து அடங்கி அடிபணிந்து நடக்க வேண்டும்,
அனைவரிடமும் கனிவாக பழக வேண்டும், அடி வாங்கினாலும் அடித்தவனை உபசரிக்க வேண்டும், அப்போது தான் இறையாண்மை காக்கப்படும்,
ஒக்கேனக்கல் உரிமைகளை வலியுறத்திய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் உச்சநீதிமன்றம்,
முல்லைப்பெரியார் பிரச்சனையில் பலமுறை ஆராய்ந்து முடிவு செய்யப்பட்ட, தமிழகத்தக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளுக்கு மட்டும் ஐவர் குழு எதற்கு?
ஏற்கனவே தமிழகத்தின் நிலை செல்லும் என்ற தீர்ப்பை எதிர்க்கும் சட்டத்தை இயற்றியவர்களுக்கு என்ன தண்டனை?
காவேரி நடுவண் குழுவின் ஆணையை செயற்படுத்தாத அப்போதைய கர்நாடக முதல்வருக்கு கண்டனம் மட்டும் தெரிவித்தால் தமிழகத்து நிலங்கள் விளைந்திடுமா,
இன்னும் கிழக்கில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பிரச்சினை ஆரம்பமாகவில்லை, பாலாறு, கிருஷ்ணா, என்று அதுவும் காத்திருக்கிறது தமிழன் பண்பை சோதிக்க,

ஆனால் தெலுங்கானா பல்கலைகழகத்தில் துணை இராணுவப்படை இருக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் சொன்னாலும், உச்சநீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக அதை தடை செய்யும், இதே நிலையில் தமிழக அரசாக இருந்தால், ஆம் படை இருக்கக்கூடாது, மாணவர்களின் உரிமைகள் தான் முக்கியம் என்று அரசுக்கு மேலும் ஒரு முறை தமது ஆளுமையை சுட்டிக் காட்டும், தமிழா நீ மத்திய அரசுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் அடிமை தான் என்று......

இவனங்கலாவது சரி 60 ஆண்டா கூடவே இருக்கானுங்க,
சம்மந்தமே இல்லாத சிங்களவனுக்கு எதுக்குயா கச்சதீவ கொடுக்கணும், அவன்கிட்ட தினமும் மீனவர்கள் அடிபட்டு சாகனும், யார கேட்டுயா கொடுத்தீங்க?

தமிழன் என்ன தான் செய்யணும் உரிமையோடு வாழ? வர்றவன் போறவன் எல்லாம் எங்கள கேவலமா பேசறான், இப்பதான் கொஞ்சம் வேகம் வந்திருக்கு தமிழனுக்கு,

உர விலையை ஏற்ற கூடாது என்று முதல்வர் கடிதம் எழுதுகிறார், அடுத்த வாரமே அறிவிக்கபடுகிறது 10௦% விளையேற்றமென்று,
கல்வித்துறையில் மாநில அரசுக்கு இருக்கும் மிகச்சிறிய அதிகாரத்தையும் பிடுங்க திட்டம், இது தான் தமிழனுக்கு என்று இருக்கும் அரசின், அதிகாரத்தின், இறையாண்மையின் உதாரணங்கள்...

சில மாதத்துக்கு முன்னால என்னெனவோ செய்து பார்த்தான் தமிழன், தன் உறவுகளை காக்க, பேரணி போனான், விடாத மழையிலும் சங்கிலியாக நின்னான், உண்ணாவிரதம் இருந்தான், தீக்குளித்தான், எந்த நாயும் எதுவும் கண்டுக்கல,

நேற்று ஒரு பதிவு பார்த்தேன் இணையத்தில், வைகோ பேசுகிறார், ஆயுதம் ஏன் தருகிறீர்கள் என்று கேட்டால், சீன தருகிறது, பாகிஸ்தான் தருகிறது, அதனால் தான் நாங்களும் தருகிறோம் என்று சொல்கிறதாம் கைகூட்டம், தொடர்ந்து வைகோ கேட்கிறார், ஈழத்தில் சீனாக்காரனின், பாகிஸ்தான்காரனின் உறவுக்காரன் இருக்கிறானா, அல்லது இந்தியனான தமிழனின் உறவுக்காரன் இருக்கிறானா,
அன்றைய கால கட்டத்தில் இன்னும் சில அறிவுமான்கள் உலா வந்தன....
வன்னிபோர்களத்தில் எழுபது ஆயிரம் மக்கள் தான் இருக்காங்கனு வங்காளி முக்கர்ஜி சொன்னாரு நாடாளுமன்றத்தில,
போரா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, எல்லாம் அமைதியா இருக்குனு சொன்னானுங்க 2 மலையாளிங்க,
ஆனா தமிழனான நம்ம அய்யா சிதம்பரம் என்ன சொன்னாருனா... இல்ல நாங்க ஆயுதம் எதுவும் கொடுக்கல, வெறும் ரேடார் மட்டும் தான் கொடுத்தோம்....
அப்படி என்ன தான்யா இருக்கு சிங்களன்கிட்ட, லட்சகணக்கான தமிழர்கள குடியுரிமைய பறித்து அனுப்புனா, தெனமும் மீனவன சுடரான், எத காட்டி தீவ எழுதி வாங்கநானு தெரியல, இன்னும் அவனுக்கு என்ன தான்யா செய்யப் போறீங்க ... கொஞ்ச கொஞ்சமா அப்படியே கன்னியகுமாரி, தூத்துக்குடி, ஒன்னு ஒண்ணா எழுதி கொடுத்துகிட்டே இருங்க, நாங்க அப்படியே பாத்துகிட்டே இருக்கோம்,

தமிழர்களே, அறநெறி, அறம், பன்பு, பாசம், பணிவு, போதும்... இவையெல்லாம் இருந்ததால் தான் நமக்கு இந்த நிலை,

ஆதிக்கங்களின் வரவால் சுவடிள்ளமால் போன வீரம், விவேகத்தை சீர்படுத்தி,
பறிக்கப்பட்ட இறையாண்மையை,
கடல் கடந்து, கண்டம் கடந்து, கோட்டை கட்டி காத்த இறையாண்மையை,
தமிழர் இறையாண்மையை,
இருக்கும் இந்த நிலத்திலாவது மீட்டெடுப்போம்.