Tuesday, February 24, 2009

தமிழருவி மணியன் விடுதலை...

தமிழருவி மணியன் விடுதலை...

ஆம், தேசிய கட்சியிலிருந்து அவர் விலகியது ஒரு பண்பார்ந்த தமிழ் ஆர்வலர்க்கு கிடைத்த விடுதலையாகவே நான் உணர்கிறேன். அவரை பற்றி அதிகமாக அறியாதவன் நான் (ஆம் வன்முறைக்கும், உட்கட்சி பூசல்களுக்கும் மட்டுமே நம் ஊரில் பல ஊடகங்கள் பறைசாற்றுவது வேறு விஷயம்)

எனினும் குமுதம் இணையதளத்தின் நேர்முகம் நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்து, அதில் அவருடைய கருத்துக்கள், உணர்வுகள், அவர் சார்ந்திருக்ககூடிய கட்சிக்கு சற்றும் உகந்ததில்லை என்பதை உணர்த்தியது, மேலும் அவர் உரையாடலின் பல இடங்களில், பெரும் மன வேதனையுடனும், ஆதங்கங்களுடனையே கட்சியில் நீடீத்திருந்ததை உணர முடிந்தது,

அந்த நேர்காணல் என்னை மிகவும் கவர்ந்தது …. அவரை பற்றி இந்நாள் வரை அறியாமல் இருந்தது சற்று வருத்தமாகவும் இருந்தது.... ஆம் சிறந்த தமிழ் ஆர்வலர், தமிழர் நலன் விரும்புவர், காந்தியவாதி, ஆம் இந்த குணங்கள் உடையவர் கண்டிப்பாக இன்றைய நிலையில் தேசிய கட்சியில் நீடிப்பது கடினமே ...

தேர்ந்த உட்கட்சி பூசல் வேதாந்தம், தலைமை எது சொன்னாலும் தலையாட்டும் வெற்று தலைகளுக்கு மட்டுமே தேசிய கட்சியில் இடம், பதவி எல்லாம் ..... ஆகவே அதை பற்றி மேலும் விவரிக்க ஒன்றும் இல்லை ....

தமிழருவி மணியனை போன்று இன்று பலரும் பல கட்சியில் நீடிப்பது தவிர்க்க முடியாத உண்மை தான் …. ஆம் பல கொள்கை, கோட்பாடு, மாண்பினால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணையும் பலர், பல கட்டங்களில் கட்சியின் அணுகுமுறைகளினால் வருத்தப்பட்டாலும், காலத்திற்கேற்ப நிலவும் சூழல்களால் வேதனையுடன் கட்சியில் தொடர்வதும், சிலர் எதிர்கால பதவிக்கும், இன்னும் சிலர் நிகழ்கால பதவிக்கும் ஊறு விளையாமல் இருக்க அதை ஒரு பெரிய நிகழ்வாகவே கருதாமல், அடுத்த வீடு பிரச்சினை, நமக்கென்ன, என்று தொடர்வதும் நாம் அறியும், அறிந்த நிதர்சன உண்மை, மிகச்சிலரே வேதனையின் விளிம்பில் உதறி எறிவது,

அந்த வகையில் தமிழருவி மணியனின் இந்த செயல் பாராட்டத்தக்கது, கட்சியை எதிர்ப்பதால் நான் இதை சொல்லவில்லை, தமிழர் நலனை உணர்த்தியதால், காலம் கடந்து எனினும், பாராட்டத்தக்கது ……

ஆனால் இதை தேசிய கட்சி ஒரு பொருட்டாக எண்ணுமா என்றால் …. இல்லை என்பது தான் எதார்த்தம் ….. ஆம் காந்தியவாதிகளுக்கு இனி காந்தி பிறந்த தேசத்தில் பொருட்டில்லை, ஆம் தேர்தல் காலங்களில் மட்டும் அதை கையாளுபவர்கள் தேசிய கட்சியினர் …..

தமிழகத்தின் ஆளும் கட்சியின் நிலையும் கிட்டத்தட்ட தமிழருவி மணியினை போன்றது தான் …. நிர்ப்பந்தம் ..காலச்சூழல், இப்படி எத்தனையோ வார்த்தைகளை நாம் இன்று பல கட்டுரைகளில் காண முடிகின்றது ….. ஆம் மக்கள் அளித்த நிலையற்ற வாக்களிப்பும், சந்தர்ப்பவாத கட்சிகளின் செயற்பாடுகளுமே இன்றைய நிலையின் பல காரணங்களில் சில,

ஆகவே தான் தேசிய கட்சி தனது நிழல் பலத்தை நிஜமாக்க முயல்கிறது, ஆட்சியே தம் கை விரலில் என்ற மாயையுடன் ஒரு இன அழிப்பை கைக்கொட்டி ஆர்ப்பரித்து வேடிக்கை பார்க்கிறது .... தமிழனுக்கு இறையாண்மை, வெளியுறவுக்கொள்கை கற்றுக்கொடுக்கிறது ... இன்னும் எத்தனை காலம் நிலைக்கும் நிழலின் தாக்கம் .... அந்தி சாய்ந்தால் நிழலின் நிலை என்ன .... இந்த நிழல் பலம் கூட எப்படி கிடைத்தது தேசிய கட்சிக்கு ... தனியே நின்றால் கிடைத்திருக்குமா இந்த நிழல் பலம் ... அல்லது அந்த துணிவு தான் உள்ளதா தேசிய கட்சிக்கு .....

இன்னும் சில நாட்களில் தெரிய உள்ளன மாற்றங்கள் .... ஈழ தமிழனின் தலை மேல் வீசிய ஆயுதங்களுடன் நில்லாத தேசிய கட்சி, இனி வரும் நாட்களில் ஆளும் கட்சியின் முதுகில் குத்த போவதையும் இங்கிருக்கும் தமிழன் காணத்தான் போகிறான் .... தேசிய கட்சியின் இழி நிலையை இன்னும் ஒருமுறை உணரத்தான் போகிறான் ....

வேதனைகளிலிருந்து மீண்டு விடுதலை அடைந்துள்ள தமிழருவி மனியனக்கு மேலும் ஒருமுறை பாராட்டை தெரிவித்து, அவருடைய தமிழர் நல பணியும், காந்தியமமும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோமாக.....

Tuesday, February 17, 2009

புரட்சி விழித்து கொண்டது....

புரட்சி விழித்து கொண்டது....

ஆம் நண்பர்களே... திடீரென்று இன்று புரட்சி விழித்து கொண்டது... இப்பொழுதுதான் கனவு கலைந்தது போல.... சற்றும் காலம் தாழ்த்தாமல், வரும் சனியே புரட்சிஎன்றும், தூதரகத்தை இழுத்து மூடவேண்டும் என்றும், புரட்சி கர்ஜிக்கிறது, எவர்க்கும் கிடைக்காத தூதரகத்தின் சாவி இவரிடம் மட்டுமே இருப்பது போல், சனியன்று சென்று அதை தாழிடப்போகிறது புரட்சி.....

தேசிய கட்சியுடன் பேரம், நினைத்தார் போல் கைகூடவில்லை... ஆகவே தான் இந்த தீடீர் எழுச்சி.... மாதங்கள் பல கடந்தபின் எழுந்துள்ள இந்த பாசப்புரட்சி....

ஆம் நண்பர்களே, தமிழனின் நிலை இதுதான்.... அங்கு ஈழத்தில் குண்டு மழைக்கு இடையே தமிழ் அடையாளத்தை நிலைநாட்ட புரட்சி... இங்கு புரட்சிகளுக்கு இடையே தமிழனின் காலம் நகர்கிறது, ஆம் வேதனையின் விளிம்பில், சொந்தங்களின் துயரில்... ஓங்கி குரலெழுப்பி ஆர்பரிப்பதை தவிர..... இதோ இதை போல் தனக்கு தானே எழுதுவதை தவிர... எதுவும் செய்ய முடியவில்லை, தெரியவும்மில்லை....

இன வஞ்சகர்களுக்கு பாடம் புகட்ட முனைப்பட்டால் கூட எந்த கூட்டத்துக்கு பாடம் புகட்டுவது... இருக்கும் அணைத்து கூட்டத்திலும் இன வஞ்சகன் இருக்கிறான்....

நண்பர்களே... இன உறவுகளே.... இந்த இக்கட்டான சூழலில்... நாம் பாடம் புகட்ட வேண்டியது தேசிய கட்சிக்குத்தான்.... ஆட்சியை கைப்பற்ற மிக முக்கிய ஆதாரமாக இருந்த தமிழனின் அன்றைய வாக்குரிமை... அன்று வருக வருக என்று வரவேற்றது... இன்று அவன் கேட்கும் ஈழ சொந்தங்களின் அமைதிக்கு செவி மறுக்கிறது....

எனவே உறவுகளே... இப்பொழுது ஒவ்வொரு கூட்டத்திலும் இன உணர்வாளனும், இன வஞ்சகனும்... கை கோர்த்து... பிச்சை கேட்கிறான்.... வாக்கு தா என்று...... எனினும் உறவுகளே... இன உணர்வாளனாலும் அவன் வஞ்சகனோடு இருப்பதனால், அவனக்கு தான் முதலில் பாடம் புகட்ட வேண்டும் .....

ஆகவே சுயேச்சை வென்றாலும் பரவாயில்லை என... அவனாவது எண்ணிக்கையில் தனிமைபடுதப்பட்டாலும், அவனாவது தமிழனுக்காக குரல் கொடுப்பான் என எப்போதும் போல் இப்போதும் நினைப்போம்....

அவன் (சுயேச்சை) விலைபோகாதவரை......