Friday, April 24, 2009

வன்னித்தமிழனை கொன்றொழிக்கும் தமிழனின் 40......

வன்னித்தமிழனை கொன்றொழிக்கும் தமிழனின் 40......

ஆம் 2004ல் தமிழகத்தில் சுளையாக அள்ளிய 40 தொகுதிகள் தான், மத்தியில் ஆட்சியமைக்க காரணமாக இருந்த எண்ணிக்கை வித்தியாசம், பாஜக'வுக்கும், கைகூட்டத்துக்கும்.....

தமிழன் அன்று 40க்கு 40 கொடுத்த போதே, ஆரம்பமாகியுள்ளது திட்டம்... அதன் முடிவு தான் இன்றைய வன்னி நிலை... என்ன சாதூர்யம் பார்த்தீர்களா....

ஏணியை எட்டி உதைப்பதெல்லாம் பழைய கதை... ஏணி இருந்த இடம் தெரியாமல் செய்வதே இன்றைய நிலை.....

இந்த 5 வருஷமா என்ன என்னவெல்லாம் கொடுத்துள்ளது இந்த கைகூட்ட மத்திய அரசு.... ஆயுதம், முப்படை பயிற்சி, இவையெல்லாம் போதாதென்று வட்டியில்லா கோடிகளில் பணம், (பல ஊடகங்களில் இதன் விளக்கம் வந்திருந்தாலும் சமீபத்திய குறிப்பு இதோ .... இறுதியில் இணைக்க பட்டுள்ளது)

அடப்படுபாவிகளா, இதையெல்லாம் இங்கே செய்திருந்தால், மும்பை 26/11, அஸ்ஸாம் குண்டுவெடிப்பு ... இன்னும் பல எண்ணிக்கையில் அடங்கா நிகழ்வுகளை தடுத்திருக்கலாமே... போயும் போயும் உங்க வெத்து வீரத்த ஏண்டா தமிழங்கிட்ட காட்றிங்க... அப்பொறம் எங்கிருந்து இறையாண்மை, தேசம், வெங்காயம்.... இதெல்லாம் பேசறது....

பக்கத்துக்கு மாநிலத்ள எப்போதும் போல தண்ணில'தான் பிரச்சினை... அத தான் தேசம், ஒற்றுமை சொல்லி விவசாயிகள கொல்றிங்க.... எங்க 40 தொகுதியையும் வாங்கி எங்க ஆளுங்களையே கொல்ரிங்களே, அப்பறோம் ஏன்டா தமிழ் தேசியம் பேச மாட்டாங்க.....

இவ்வளவு நடந்த பின்னும் வரும் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் கைக்கூட்டம் வெற்றி பெறுகிறதோ.... அந்த தொகுதியில் கைகூட்டத்துக்கு வாக்களித்தவர்களுக்கு கோயில் தான் கட்ட வேண்டும்......

நான் எந்த கோயில்'ன சொல்றேன்னா ........

http://www.thestatesman.net/page.arcview.php?clid=2&id=284403&usrsess=1

Wednesday, April 22, 2009

பகடைக்காயாகும் புதுவை....

பகடைக்காயாகும் புதுவை....

மளிகை கடைகளிலும், சந்தையிலும், வியாபாரம் முடிவு செய்யப்பட்டு, கடைசியாக கொடுக்கப்படும் கொசுறு போல் ஆகிவிட்டது புதுவை மக்களவை தொகுதியின் நிலை,

தமிழகத்தில் பெயரளவில் இருந்தும், இல்லாமல் இருக்கும் கைக்கூட்டம், புதுவையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு, திராவிடக்கட்சிகளின் இந்த கொசுறு கலாசாரம் தான் பிரதான காரணம்,

ஒவ்வொரு தேர்தலிலும் கைக்கூட்டமும், 2001ல் புதுவையில் ஆட்சியை புடிப்போம் என்று கோழி பிடிப்பது போல் கூவிய தன்னிகரில்லா தன்மான கொள்கைமான், அன்புச்சகோதரியின் அண்ணன் மருத்துவரும், மாறி மாறி புதுவையை என்னவோ தங்களுக்கு எழுதி கொடுக்கப்பட்டுவிட்ட தொகுதி போல் பாவிப்பதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் புதுவை தொகுதியை வெறும் எண்ணிக்கை கண்ணோட்டத்துடனேயே காண்பதே ஆகும்,

புதுவையில் கைக்கூட்டதுக்கு நிகராக உள்ள திமுக, தமிழக தலைமை எது சொன்னாலும், அப்படியே ஆமாம் போடுவதோடு நில்லாமல், அறிவுடைநம்பி கொள்கைமான் மருத்துவர் கட்சியை எப்படியாவது இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று, இனத்துரோகி, கைக்கூட்டதுடன் கைக்கோர்த்து களத்தில் குதித்துள்ளது.

ஆக இருக்கும் பிரதான இரண்டு அணிகளும் இன வஞ்சக அணிதான், புதுவை மக்களுக்கு இப்படி ஒரு நிலை வரவேண்டுமா?

தமிழக தலைமை என்ன முடிவு எடுத்தாலும் ஆமாம் போடும் புதுவை திமுக'வினர், பெயரளவிலாவது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அல்லது மக்களுடைய கருத்துக்களை தமிழக தலைமைக்கு தெரிவிக்கிறார்களா எனபது தெரியவில்லை,

சமீபத்தில் நான் படித்த ஒரு இணையதளச் செய்தி துணுக்கில்,
“தமிழக தலைமை அலுவலக’பவனக்கு பெனாயில் வாங்க கூட தேசிய தலைமையிடம் அனுமதி கோரும் கைக்கூட்டம்”... என்ற விமர்சனம்....

மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தலைமை என்ன சொன்னாலும் கேட்கும் பட்சத்தில் புதுவை திமுக'வுக்கும் இந்த நிலை தான் ஏற்படும்,

தமிழகத்தில் ஆட்சி நிர்பந்தம் காரணமாகத்தான் புதுவையில் கைக்கூட்டம் ஆட்சியில் நீடிப்பதற்கு காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை,

இந்த நிலையிருக்க, புதுவை எங்கள் கோட்டை, பருத்திக்கொட்டை! என்று பீற்றிக்கொள்ளும் கைக்கூட்டத்தை, தமிழகத்தில் ஒடுக்கி அடக்கியதை போல், புதுவையிலும் செய்ய, புதுவை மாநில திமுக தீர்க்கமான உரிமைகளை தலைமையிடம் பெற முடியாதவரை கைக்கூட்டத்தின் கை ஓங்கியே இருக்கும் எனபது தான் நிதர்சனம்.....

அல்லது இந்த இன வஞ்சக சூழலை தக்கவாறு பயன்படுத்தி, இரு பிரதான அணியை தோல்வியுற செய்ய முடியாவிட்டால் கூட, தக்கதொரு பாடம் புகட்ட மாற்று அணியினர் தங்கள் யூகங்களை தக்கவாறு ஒருநிலை படுத்த வேண்டும்,

மக்களே, புதுவை மக்களே, எல்லாம் உங்கள் முடிவில், என்ன செய்யப் போகிறீர்கள்!!

Wednesday, April 8, 2009

ஷூ வீச்சு - தமிழக/புதுவை மக்களுக்கு மேலும் ஒரு படிப்பினை…

ஷூ வீச்சு - தமிழக/புதுவை மக்களுக்கு மேலும் ஒரு படிப்பினை…

தமிழக/புதுவை மக்களே, நண்பர்களே, பார்த்தீர்களா, கேட்டீர்களா, இன்றைய முக்கியச் செய்தியை,

“உள்துறை அமைச்சர் மீது ஷூ(காலணி) வீச்சு!!!!

”இதையும் தினமும் வந்து போகும் ‘முக்கியச் செய்தி’ போல் சற்று நேரம் பார்த்து, மேலும் சிலர் இன்னும் சற்று நேரம் விவாதித்து, பின்னர் மறந்து விடாமல் இந்த நிகழ்வு பற்றியும், அது எவ்வாறு தமிழர்களுக்கும் பொருந்துகிறது என்பதையும் சற்று எண்ணிப் பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்,

ஆனால் அதற்காக காலணி வீசியதை நான் இங்கே நியாயப்படுத்த விரும்பவில்லை, எனினும் இன்றைய விளம்பரப் பேராசைப் பிடித்த பத்திரிகை மற்றும் ஊடக கூட்டம், எழுத்து சுதந்திரம், எப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்குகின்றன என்பதற்கு இந்த காலணி வீச்சு, பல உதாரணங்களில் ஒன்று….

அந்த வகையில் இந்த நிகழ்வு பத்திரிகை ஊடாகவே, கொடுரத்தின் வீரியத்திற்கேற்ப, பிரபலப்பட்டு, விளம்பரப்பட்டு விட்டது, இது இன்னும் தொடரும்….

காலணி வீசிய அந்த சீக்கிய பத்திரிகையாளர், அவர் கொண்டு வர நினைத்த எழுச்சியை இந்நேரம் அவரது சமூகம் கொண்டிருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது, அவர் தனது மனக் குமுறுளை ஒரு முழு எழுச்சியாக மாற்றி வெற்றி கொண்டுள்ளார்….

அதை எப்படி அடைந்தார் எனபது எப்போதும் போல் மறந்து, மறைத்து, மறக்கப்படும்…

அதுவும் அரசியல்வாதிக்கு எதிராகத்தானே இந்த நிகழ்வு நடந்திருக்கிறது, ஆகவே அவர்களும் இதை எளிதாக மறந்து விடுவார்கள்….

அனால் தமிழர்கள், தமிழகத்திலே, புதுவையிலே வாழும் நாம் என்ன செய்யப் போகிறோம், நான் முன்னரே கூறியது போல், காலணி வீச்சை இங்கு நியாயப்படுத்தப் போவதில்லை,

நாமும், ஒரு இனம் படுகொலை செய்து அழித்தொழிக்கப்பட்டபின் நமது ஆதங்கத்தை, குமுறுளை வெளிப்படுத்த போகிறோமா?

அல்லது இந்த இன அழிப்பை தோள் கொடுத்து, உடனிருந்து, “ஐலசா” போட்டு ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கும் தேசிய கட்சியை இன்னமும் நம் தமிழ் நிலத்தில் நீடிக்க அனுமதிக்க போகிறோமா….

நண்பர்களே, இனி நடக்க போகும் நிகழ்வை சற்று உன்னிப்பாக கவனியுங்கள்… காலணி வீசிய பத்திரிகையாளர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தமிழர்கள் நாம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்…

தேர்தல் காலம் எனபது ஒரு பக்கம் இருந்தாலும்… நான் கவனிக்க போவது சீக்கியரான பிரதமர் எடுக்க போகும் நிலை… ஏனெனில் இது அவரது இனம் சம்மந்தப்பட்ட நிகழ்வு…

அரசியலாக இருந்தால் அவரால் எதுவும் செய்ய முடியாது!! அது நாடறிந்த உண்மை…. அந்த துறை இத்தாலி அன்னையுடையது!!!

சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், இப்போது நான் சொல்லப்போகும் செய்தி…

சீக்கிய படுகொலை வழக்கில் சமீபத்தில் CBI தனது விசாரணை அறிக்கையில், கொடுரக் கலவரத்துக்கு காரணமான சம்மந்தப்பட்ட தேசிய கட்சியின் பிரமுகரை விடுவித்தாலும் … அதே தேசிய கட்சியின் அரசை தலைமை மட்டுமே தாங்கும் நமது பிரதமர் எடுத்திரிக்கும் நடவடிக்கை …

அந்த தீர்க்கமான முடிவில் தான் அவர் பாராட்டை பெறுகிறார்….

தனது கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்றாலும் கூட, தனது இனத்துக்காக செயல்படுகிறார், இழைக்கப்பட்ட கொடுரத்துக்கு குரல் கொடுக்கிறார்… அந்த நடவடிக்கை என்ன? ஆங்கில கட்டுரையில் தான் அதை படித்தேன்.. முடிந்த வரை மொழிமாற்றம் செய்துள்ளேன்… (ஆங்கில கட்டுரையின் இணைப்பு இந்த கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது)

CBI, கலவரத்துக்கு காரணமான அந்த தேசிய கட்சியின் பிரமுகரை விடுவித்தாலும், அந்த தீர்ப்பை நடைமுற படுத்த தனி ஆணையம் ஒன்று உள்ளது, ஆனால் தற்பொழுது அந்த ஆணையம் CBIக்கு உட்பட்டே செயல்படுகிறது… ஆகவே CBI வழங்கிய தீர்ப்பை அது அப்படியே "ஆமாம்" போடும்.. என்பதை பிரதமரும் உணர்ந்துள்ளார்..

ஆகவே அவர் தற்பொழுதுள்ள ஆணையம் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடாமல்,… தனி நீதிபதிகளை கொண்ட CBI சார்பற்ற மாற்று ஆணையத்தை, இந்த தீர்ப்பிர்க்கு மட்டும் நியமனம் செய்துள்ளார்…

தமிழக/புதுவை மக்களே, பார்த்தீர்களா… இது இனப்பற்றா… அல்லது நம்மிடேயும் உள்ளனரே, தமிழனக்கு இறையாண்மை போதிக்கும் தேசிய கட்சியின் ஆண்மாக்கள், இவர்கள் இன பற்றாளர்களா…..

பிரதமரே, தன் இனத்துக்காக, தானே தலைமை தாங்கும் அரசுக்கு எதிராக தனி ஆணையம் அமைத்திருந்தாலம், உண்மையான அரசியல் அதிகார மையமான இத்தாலி அன்னையும், அவருடைய அறிவார்ந்த அரசியல் சானக்கியர்களும், சீக்கியர்களுக்கு நியாயம் கிடைக்க அனுமதிப்பார்களா என்பதை நாம் பொருத்திருந்து பார்த்தாலும், அது என்றுமே நடக்காது என்பது தான், நாமறியும், நாடறியும் உண்மையான பேருண்மை…..

எனினும் இந்த நிலையில் மேலும் ஒரு நிதர்சன உண்மையை கவனிக்க வேண்டும்…

மக்கள் காலப்பொழுதில், பல நேரங்களில் வெகுவிரைவில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்து விடுகிறார்கள் எனபது தான்; அதன் விளைவு தான் நாம் இன்று காணும் அரசியல் அரங்கம்…

இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில்…

அப்படிப்பட்ட கொடுர சீக்கிய கலவரத்துக்கு பின்னரும் கூட, சீக்கிய மக்கள் இந்த தேசிய கட்சியை தமது மாநிலத்தில் நிலைக்க அனுமத்திப்பதோடு நில்லாமால், ஆட்சி மேடையிலேயே அமர்த்தி அழகு பார்த்தனர் என்பது தான் மறுக்க முடியாத, கண்களை மூடிக்கொண்டு ஏற்று கொள்ள வேண்டிய அப்பட்டமான உண்மை… இதை சாதிக்க முடிந்ததால் தான் தேசிய கட்சியின் அரசியல் சாதூர்யம் இன்னமும் நிலைக்க முடிகிறது,

மக்களின் மிகக்குறுகிய நினைவாற்றளால், தலை மேல் ஏறி மிதிக்க முடிகிறது….

ஆம், தமிழக/புதுவை மக்களே, நாமும் இதையே தான் செய்து கொண்டிருக்கிறோம்… என்ன படுகொலை மட்டுமே இன்னும்
நடக்கவில்லை…. அது நடைபெறுவது அருகில் உள்ள தமிழ் ஈழ தீவில்….

அரசியல் ரீதியாக 40 ஆண்டுகளாக தேசிய கட்சியை தமிழகத்தில் ஆட்சியிலிருந்து விலக்கினாலும், இன்னமும் நாம் அவர்களை முழுமையாக தனிமைப்டுத்தி அகற்ற முடியவில்லை, இன்னமும் அவர்கள் இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களாகவே உள்ளனர்…. புதுவையில் சொல்ல வேண்டியதில்லை, கூட்டணிக கொடுமையால் அங்கு, திமுக தலைமையின் நிர்பந்தத்தால், தேசிய கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது….

தமிழக/புதுவை மக்களே, காத்திருக்க போகிறோமா?

படுகொலையை நாமும் உணரும் வரை…..

இறுதியாக… ஒரு உறுதியான, உண்மையான இனப்பற்றாளன், சமூகப் பற்றாளன் கூறிய வார்த்தைகளோடு, இந்த கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்…

இது எப்பொழுது கூறப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் அந்த சூழல் நாம் உணரும்படி உள்ளது….

சீக்கியரான உங்களை, தேசிய கட்சி, நாட்டின் உயரிய பதவியில், பிரதமர் ஆக்கியுள்ளதால் , சீக்கியர்கள் கடந்த கால நிகழ்வுகளை மன்னித்து விட்டார்களா? என்று பிரதமரை பத்திரிகை நிருபர் கேட்டதற்கு,

"சீக்கியர்கள், கொடுரப் படுகொலையை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்" என்று ஒரு உண்மையான இனப்பற்றை வெளிப்படுத்தினார், இன்றைய பிரதமர்…

பார்ப்பதற்கு தான் சற்று மெலிந்தவராக, அமைதியாக இருந்தாலும், ஒரு உண்மையான இனபற்றாளனின் குமுறல், ஒரு இனத்தின் வேதனை, வலி அந்த வார்த்தைகளில் உணர முடிகிறது,

வீரம் செழிந்த சீக்கியனின் சீற்றம் அது…


சீக்கியனும் இந்தியன் தான், தமிழனும் இந்தியன் தான், அவனது உரிமைகள் பறிக்கப்படாதவரை, எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்வரை…… அவனது உணர்வுகள் மதிக்கப்படும்வரை….

07-April-2009; இந்த நாள் சீக்கியர்கள் மட்டும் நினைவு கொள்ள வேண்டிய நாளல்ல,

தன் இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுரத்தையும், அநீதியையும், கண்டு குமுறும் ஒவ்வொரு இனப்பற்றாளனும் நினைவிற் கொள்ள வேண்டிய நாள்… அந்த வகையில் இது தமிழனக்கும் பொருந்தும்.....

http://news.in.msn.com/National/article.aspx?cp-documentid=2465748