Monday, May 4, 2009

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

ஈழ மண்ணில் மீண்டும் ஒரு போர்... உடைமைகளை இழந்து, வீடிழந்து, உயிரையும் இழந்து மானுடம் காணக்கூடாத இன்னலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழரின் துயர நிலை கண்டு மனம் வெதும்பும் புலம்பெயர் ஈழத்தமிழர் போலவே புதுவையிலிருந்து நானும் உங்கள் துயரை பகிர்ந்து கொள்கிறேன்... என்னைப் போலவே இன்னும் பலரும் இதை மட்டுமே செய்ய முடியும் என்பது மறுக்க முடியாத ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்த நிலை...

எனினும் இந்த தருணத்தில், தமிழகத்தில், வழக்கம் போல் எழுந்துள்ள தேர்தல் களியாட்டமும், இந்த ஏமாற்று களியாட்டத்துக்கு இந்த முறை, ஈழம், பிரதான கருவியாக பயன்படுத்தபடுவது பற்றியும், இந்த சூசக களியாட்டத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆதரவு அளிக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கு விடுக்கும் வேண்டுகோளாக இந்த பதிவை நான் இங்கு விவரிக்கிறேன்....

தமிழனுக்கு எதிரி தமிழனே!!

தமிழனுக்கு எதிரி வேற்று கிரகத்திலிருந்தோ, வேற்று நாட்டிலிருந்தோ, வேற்று மாநிலத்தலிருந்தோ வர வேண்டிய அவசியமே இல்லை, அவனுடனேயே இருக்கும் வஞ்சகன் தான் என்று பலரும் உணர்ந்து கூறியுள்ளதை நான் முன்னரே எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன், ஈழத்தமிழர்கள் நீங்களும் எங்களை விட அதிகமாக உணர்ந்துள்ளீர்கள்... எனினும் மீண்டும் அதே தவறை இன்றைய நிலையில் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்....

தமிழக அரசியலையும், குறிப்பாக சொல்வதென்றால் சமீப காலமாக பெருமளவு மாற்றம் கண்டுள்ள இந்திய அரசியலையும் உங்களில் பலர் அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கலாம், அந்த பெருமளவு மாற்றம் என்பது வேறொன்றுமல்ல, சமூக பற்றற்ற, நாட்டுப்பற்றற்ற, கொள்கை என்றால் என்ன, அது என்ன விலை, எங்கே கிடைக்கும், என்ற கீழ்த்தரமான மாற்றம் தான்,

வெற்றி பெற, பதவி பெற, ஆட்சி பிடிக்க மக்களின் தொண்டையை கூட பிடித்து முருக்க தயங்காத பீடர்களின் பளிங்கு தோட்டமாக உருமாறியிருப்பது தான் இன்றைய தமிழக தேர்தல் களம். ஆக இந்த களத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், முழக்கமிடுவார்கள், இந்த நச்சுக் கடலில் நீங்களும் விழுந்து, ஏற்கனவே பிளவு பட்டிறிக்கும் தமிழ் சமூகத்தை மேலும் சிதறடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

நான் இங்கு எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ விமர்சிக்க முயலவில்லை, இருந்தாலும் சில நாட்களாக புலம்பெயர் ஈழத்தமிழர்களும் ஏனைய நாட்டின் தமிழ் அமைப்பினரும் பெருவாரியாக அறிவிக்கும் நன்றி மடல்களும், எதிர்மறை பிராச்சாரங்களும் தமிழர்களின் நோக்கத்திலிருந்து பாதை தவருவதாகாவே உள்ளன,

தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரின் திடீர் மனமாற்றமும், தேர்தல் வாக்குறுதிகளும், அதனை தொடரும் புலம் பெயர் தமிழர்களின் நன்றி மடல்களும் சற்று வியப்பை அளிக்கத்தான் செய்கிறது, தேர்தல் நேர வாக்குருதிகலாகவாவது அம்மையாருக்கு திடீர் ஞானோதயம் வந்ததே, அதுவரை மகிழ்ச்சியே, இந்த நிலையிலாவது அம்மையார் நிலை மாறியுள்ளார் என்று ஈழத் தமிழர்கள் நீங்கள் நம்புவீர்களேயானால், நாம் அதை தடுக்க விரும்பவில்லை, நீங்கள் நன்றி பாராட்டுவதை குறையென்றும் சொல்லவில்லை, காலம் வழிசெய்தால், தமிழரின் நோக்கம் தமிழீழம் அமைந்தால் யார் என்ன சொன்னால் என்ன...

எனினும் அதற்குமுன் நான் அறிந்த சில செய்திகளை உங்களுடன் இதோ பகிர்ந்து கொள்கிறேன் (எல்லாம் தெரிந்த செய்தி தான்) ,

ஏன் இந்த திடீர் மாற்றம்,

போர்முனையில் மடியும் தமிழனின் ஓலம் கேட்க இத்தனை காலமா?

"அங்கே இருந்தால் புதைமணலில் தான் போவீர்கள், இங்கே எங்களுடன் கூட்டு சேர்ந்தால் ஒளிமயமான எதிர்காலம்" என்று கைக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தபோது தெரியவில்லையா ஈழ நிலை?

'போரென்றால் மக்கள் மடிவது இயல்பு தான்' என்று சொற்பொழிவு நடத்தியபோது தெரியவில்லையா ஈழ நிலை?

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஈழத்துக்காக ஓயாமல் குரல் கொடுக்கும் வைகோவுக்கு ஏற்பட்ட நிலை, அம்மையாரின் அரசியல் பேராசையால், வைகோ எந்த நிலை வரை சென்று, நிர்பந்தத்தால் இன்றைய நிலையில் நீடிப்பதும், சமீபத்தில் ஒரே மேடையில் அவருக்கு அம்மையாரால் அளிக்கப்பட்ட (அவ) மரியாதையையும் ஊடகங்களில் நீங்கள் படித்திருப்பீர்களேயானால் புரியும் அம்மையாரின் ஈழ பாசம்!!

இன்னும் சொல்வதென்றால் தேர்தல் முடிவுக்குப்பின் ஏற்படும் அதிர்ச்சிக்கு நீங்கள் உங்களை திடப்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்...

ஆக இருக்கும் எந்த கட்சியும் யோக்கியர்கள் என்றோ, வஞ்சகர்கள் என்றோ நான் கூற விழையவில்லை... இதே ஆளும் கட்சிக்கு தமிழக சட்ட மன்றத்தில் அருதி தனிப்பெரும்பான்மை இருந்திருக்குமேயானால், அந்த கட்சியின் இன்றைய நிலை வேறுபட்டிருக்கும் என்பது எதார்த்தம், அனைவரும் அறிந்தது...

ஆக இருக்கும் அனைவரும் தம் கொள்கைகளை மாற்றி அமைத்துக்கொள்வது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதற்கும், ஆட்சியை கைப்பற்றுவதற்கும் தான்... ஆனால் ஆளும் கட்சியின் அதிகார மட்டத்தில் தான் இந்த எண்ணம் இருக்கிறது என்பதை புலம் பெயர் ஈழத்தமிழர்கள் உணர வேண்டும், உள்ளூர் அரசியல் அறியும் பொது மக்களும், ஏனைய கட்சியின் ஆதரவாளர்களும், தொண்டர்களும் எப்போதும் ஈழ ஆதரவாளர்கள் தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,

நான் முன்னரே குறிப்பிட்டது போல, நீங்கள் ஈழ ஆதரவு தலைவர்களுக்கு நன்றி பாராட்டுவது பிழையல்ல, ஆனால் சிலரை போற்றுவதும், சிலரை தூற்றுவதும் இருக்கும் பிரிவினையை மேலும் அதிகரிக்கும் என்பது எனது கருத்து, அது தமிழரின் நோக்கத்தை திசை திருப்பும் செயலாகவே அமையும்....

ஈழ போராளிகள் களத்தில் போராடுகிறார்கள், அவர்கள் தமிழக அரசியலை விமர்சிப்பதில்லை,

நாமும் இந்த அரசியல் களத்தை ஒதுக்கிவிட்டு, எப்போதும் போல் நோக்கம் சிதையாமால், வழி பிறழாமல், தம்மால் இயன்ற பங்களிப்பை அளித்து இறுதி இலக்கிற்கு வலிமை சேர்ப்போம்.....

No comments:

Post a Comment