பகடைக்காயாகும் புதுவை....
மளிகை கடைகளிலும், சந்தையிலும், வியாபாரம் முடிவு செய்யப்பட்டு, கடைசியாக கொடுக்கப்படும் கொசுறு போல் ஆகிவிட்டது புதுவை மக்களவை தொகுதியின் நிலை,
தமிழகத்தில் பெயரளவில் இருந்தும், இல்லாமல் இருக்கும் கைக்கூட்டம், புதுவையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு, திராவிடக்கட்சிகளின் இந்த கொசுறு கலாசாரம் தான் பிரதான காரணம்,
ஒவ்வொரு தேர்தலிலும் கைக்கூட்டமும், 2001ல் புதுவையில் ஆட்சியை புடிப்போம் என்று கோழி பிடிப்பது போல் கூவிய தன்னிகரில்லா தன்மான கொள்கைமான், அன்புச்சகோதரியின் அண்ணன் மருத்துவரும், மாறி மாறி புதுவையை என்னவோ தங்களுக்கு எழுதி கொடுக்கப்பட்டுவிட்ட தொகுதி போல் பாவிப்பதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் புதுவை தொகுதியை வெறும் எண்ணிக்கை கண்ணோட்டத்துடனேயே காண்பதே ஆகும்,
புதுவையில் கைக்கூட்டதுக்கு நிகராக உள்ள திமுக, தமிழக தலைமை எது சொன்னாலும், அப்படியே ஆமாம் போடுவதோடு நில்லாமல், அறிவுடைநம்பி கொள்கைமான் மருத்துவர் கட்சியை எப்படியாவது இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று, இனத்துரோகி, கைக்கூட்டதுடன் கைக்கோர்த்து களத்தில் குதித்துள்ளது.
ஆக இருக்கும் பிரதான இரண்டு அணிகளும் இன வஞ்சக அணிதான், புதுவை மக்களுக்கு இப்படி ஒரு நிலை வரவேண்டுமா?
தமிழக தலைமை என்ன முடிவு எடுத்தாலும் ஆமாம் போடும் புதுவை திமுக'வினர், பெயரளவிலாவது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அல்லது மக்களுடைய கருத்துக்களை தமிழக தலைமைக்கு தெரிவிக்கிறார்களா எனபது தெரியவில்லை,
சமீபத்தில் நான் படித்த ஒரு இணையதளச் செய்தி துணுக்கில்,
“தமிழக தலைமை அலுவலக’பவனக்கு பெனாயில் வாங்க கூட தேசிய தலைமையிடம் அனுமதி கோரும் கைக்கூட்டம்”... என்ற விமர்சனம்....
மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தலைமை என்ன சொன்னாலும் கேட்கும் பட்சத்தில் புதுவை திமுக'வுக்கும் இந்த நிலை தான் ஏற்படும்,
தமிழகத்தில் ஆட்சி நிர்பந்தம் காரணமாகத்தான் புதுவையில் கைக்கூட்டம் ஆட்சியில் நீடிப்பதற்கு காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை,
இந்த நிலையிருக்க, புதுவை எங்கள் கோட்டை, பருத்திக்கொட்டை! என்று பீற்றிக்கொள்ளும் கைக்கூட்டத்தை, தமிழகத்தில் ஒடுக்கி அடக்கியதை போல், புதுவையிலும் செய்ய, புதுவை மாநில திமுக தீர்க்கமான உரிமைகளை தலைமையிடம் பெற முடியாதவரை கைக்கூட்டத்தின் கை ஓங்கியே இருக்கும் எனபது தான் நிதர்சனம்.....
அல்லது இந்த இன வஞ்சக சூழலை தக்கவாறு பயன்படுத்தி, இரு பிரதான அணியை தோல்வியுற செய்ய முடியாவிட்டால் கூட, தக்கதொரு பாடம் புகட்ட மாற்று அணியினர் தங்கள் யூகங்களை தக்கவாறு ஒருநிலை படுத்த வேண்டும்,
மக்களே, புதுவை மக்களே, எல்லாம் உங்கள் முடிவில், என்ன செய்யப் போகிறீர்கள்!!
Wednesday, April 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment