வழக்கமாக காவிரியால்தான் இது போன்ற அவலநிலை ஏற்படும், இப்பொழுது மிக தந்திரமான திட்டமிடுதலால் அரங்கேறியுள்ளது முல்லைப்பெரியார் நாடகம்... இந்த நாடகம் எவ்வாறு நிறைவேறபோகிறது என்பதை அரசியல் சூழ்ச்சி அறிந்தவர்கள் அனைவரும் அறிந்திருப்பர்... எவருக்கு மத்தியில் ஆளுமை இருக்கிறது என்பதை தமிழகத்தின் முன்னால் முதல்வர் அவர்களே பதிவு செய்திருக்கிறார்... சமையல்காரன் தொடங்கி பாதுகாப்பு ஆலோசகர் வரை மலையாளிகளின் அடிவருடித்தனம் சொல்ல தேவையில்லை..
நமது மீனவர் தாக்குதலாகட்டும், கூடங்களும் போராட்டமாகட்டும்... தமிழகத்தை சேர்ந்த எந்த அமைச்சராவது எந்த நடவடிக்கையாவது எடுக்கிறார்களா.. ஆனால் இப்பொழுது பாருங்கள்... வட நாட்டு ஊடகங்கள் எத்தனை முறை இந்த செய்தியை என்னமோ அவன் வீட்டு பிரச்னை மாதிரி தினமும் ஊதுகிறான்... தமிழக மீனவன் சுடப்படும் பொது ... எருமை மாடு மேல மழை பெய்யும் கணக்கா இருக்கும் பாதுகாப்பு அமைச்சர் இப்போ பிரதமரை சந்திக்கிறார்... எதிர்கட்சி தலைவர் பிரதமர சந்திக்க போறார் ... இன்னும் எவன் எவனெல்லாம் என்ன பண்ண போரானோம்....
ஆக தமிழகத்துக்கு எந்த பக்கத்திலிருந்தும் நீர் கிடைக்க போவதில்லை.. ஆக நமக்கிருக்கும் ஒரே வழி நீர் மேலாண்மையில் நாம் தன்னிறைவு அடைவதுதான்.. அரசு இந்த குறிக்கோளுடன் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்... இனி நமக்கு எவரும் உதவியல்ல... நியாமாக கிடைக்க வேண்டிய பங்கை வழங்க போவதில்லை.. அது உச்ச்சநிதிமன்றமாகட்டும் அல்லது மத்திய ஏகாதிபதியமாகட்டும்... வாழ்வோ சாவோ நமக்கு நாமே நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்...
தமிழக அரசு இனியாவது முழுக்க முழுக்க அணைத்து துறைகளுக்கும் அரசியல் சார்பற்ற ஒரு தலைமை நிபுணர் ஆலோசனைக்குழுவை ஏற்படுத்த வேண்டும்.. இந்த குழு முக்கியமாக அறிவியில் கல்வி, தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, வேளாண்மை, வேளாண்மை ஏற்றுமதி ஆகியவற்றில் நாம் எவரையும் நம்பியிராமல் தன்னிறைவை அடைவதோடு நம்மை இந்த நிலைக்கு, அவநிலைக்கு கொண்டு வந்தவர்கள் முன் வளர்ந்து திமிர வேண்டும் ... என்றானாலும் நாம் இந்த நிலைக்குதான் தள்ளபடபோகிறோம்... இப்பொழுதே அரசு இந்த முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்,
என்றைக்கும் நமக்கு ஆதரவு தரப்போவதில்லை மத்திய ஏகாதிபத்தியம்.. அவர்களோடு கூட்டணி வைதிருப்புவர்களாலும் கூட்ட முடிந்தது பொது குழுகூட்டம் தான்.. அதை தவிர நாம் எதிர்ப்பார்ப்பதற்கும் வேறு எதுவுமில்லை..
சில ஆண்டுகளாக மழையால் காவிரியில் தடங்கல் இல்லாமல் உள்ளது... அது எப்பொழுது முறியும் என்று தெரியவில்லை... இந்த பக்கம் பாலாற்றில் ஆரம்பமாகிவிட்டது புதிய அணைக்கான பணிகள்...
ஆக தமிழக அரசு இருக்கும் நீர் நிலைகளை கொண்டு எவ்வாறு நமக்கு நாமே தன்னிறைவு அடைவது என்ற தொலைநோக்கு ஆராய்வுகளை முன்னெடுக்க வேண்டும்.. மிக முக்கியமாக இது அரசியல் சார்பற்ற எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் பனி தடைபெறாவண்ணம் அனைவருக்கும் பொதுவாக ஒரு அரசு நிறுவனமாக தலைமை ஆராய்வு மற்றும் தொழில்நுட்பம் ஆலோசனை குழவாக செயல்பட வேண்டும்,
இதெல்லாம் நடக்குமா!!!!
No comments:
Post a Comment